'ட்விட்டருக்கு ஒரு நல்ல இன்ஜினியர் தேவைப்படுறார்...' 'எமோஜிய பார்த்து கடுப்பான ஆர்சிபி டீம்...' 'உடனே ஒரு செம கலாய் ட்வீட்...' - நெட்டிசன்கள் படுரகளை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியாக மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளது.
இந்த நிலையில் இப்போட்டிகாக ட்விட்டர் நிறுவனம் செய்த தவறால் ஆர்.சி.பி அணியை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மேலும் சிறப்பானதாக மாற்ற எண்ணிய ட்விட்டர் நிறுவனம் வருடம்தோறும் எமோஜியை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
அப்படியாக இந்த வருடமும் ஒவ்வொரு அணிகளின் ஹேஷ்டேக்குகள் பக்கத்தில் அந்த அணியின் ஜெர்ஸி எமோஜி தோன்றுவதை ட்விட்டர் நிறுவனம் இன்று தொடங்கியது. ஆனால் அதில்தான் ஆர்.சி.பி அணிக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்.சி.பி அணியின் 3 ஹேஷ்டேக்குகளான #RCB, #PlayBold and #WeAreChallengers ஆகியவைக்கு அருகாமையில் பெங்களுரு அணியின் ஜெர்ஸி எமோஜிக்கு பதில் சிஸ்கே அணியின் ஜெர்ஸி எமோஜி தோன்றுகிறது.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் ஐபிஎல் தொடருக்கான எமோஜியில் தவறு இருந்தால் விட்டு வைப்பார்களா. உடனடியாக ட்விட்டர் நிறுவனத்தையும், அந்த எமோஜியை உருவாக்கியவரையும் குறித்து அதிகளவில் மீம்களையும் உருவாக்கி இணையத்தில் பரப்பினர்.
இதுபற்றி பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவு ஒன்றை செய்துள்ளது. அதில், ட்விட்டர் நிறுவனத்திற்கு சிறந்த தொழில்நுட்ப பொறியாளர் தேவைப்படுவது போல் தெரிகிறது. சிறந்த பொறியாளரை வேலைக்கு எடுக்க பெங்களூரு சிறந்த நகரம் என கூறியுள்ளது. மேலும் #WhatswithyourEmojis என்ற ஹேஷ்டேக்கையும் போட்டுள்ளது.
Hey @Twitter @TwitterIndia, looks like you need better tech engineers. Bengaluru is the right place to start hiring. #WhatsWithYourEmojis
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 3, 2021