அடேங்கப்பா..! 18 கோடிக்கு ஏலம் போன டுவிட்டர் சிஇஓ-ன் ‘முதல்’ ட்வீட்.. அப்படி என்ன பதிவிட்டு இருந்தார்..?
முகப்பு > செய்திகள் > வணிகம்டுவிட்டர் சிஇஓ பதிவிடப்பட்ட ட்விட் ஒன்று ரூ.18 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி (CEO) ஜாக் டார்சி பதிவிட்ட முதல் டுவிட்டர் பதிவு ரூ.18 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கிடைத்த தொகையை பிட்காயின்களாக தொண்டு நிறுவனத்திற்கு வழங்கு உள்ளதாக ஜாக் டார்சி தெரிவித்தார். இதனை அடுத்து உடனடியாக ஏல தொகை முழுவதும் பிட்காயின்களாக மாற்றப்பட்டு நன்கொடையாக வழங்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
15 வருடங்களுக்கு முன்பு (மார்ச் 6, 2006-ம் ஆண்டு) பதிவிடப்பட்ட இந்த டுவிட்டர் பதிவு என்.எப்.டி. (Non-Fungible token)-ஆக வேல்யுபில்ஸ் என்ற தளத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட பிரிட்ஜ் ஆரகிள் (Bridge Oracle) நிறுவன தலைமை செயல் அதிகாரி சினா எஸ்டவி, டுவிட்டர் சிஇஓ-ன் முதல் டுவிட்டர் பதிவை ஏலத்தில் வாங்கினார்.
இதுகுறித்து தெரிவித்த வேல்யுபில்ஸ், ‘நீங்கள் வாங்குவது டுவிட்டர் பதிவின் டிஜிட்டல் சான்றிதழ். இதனை கிரியேட்டர் வெரிபை மற்றும் கையொப்பமிட்டு கொடுப்பதால், இது பிரத்யேகமானதாக மாறுகிறது’ என தெரிவித்துள்ளது.