'என்னையே வேலைய விட்டு தூக்கிட்டீங்கல...' 'என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க...' 'பல மாசமா ராத்திரி பகலா திட்டம் போட்டு...' - பிரபல நிறுவனத்தை பழிவாங்க செய்த அதிர்ச்சி காரியம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மைக்ரோ சாப்டின் நிறுவனத்தில் செய்த செயலால் அமெரிக்க அரசு பிடிவாரண்ட் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த தீப்பன்ஷூ கேர் என்ற நபர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் கலிபோர்னியாவின் கால்ர்ஸ்பேட்டில் (Carlsbad) உள்ள மைக்ரோ சாப்டின் தலைமை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியில் இணைந்துள்ளார்.
அதன்பின் ஒரு வருடம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தும், நிறுவனத்தின் எதிர்பார்ப்பை தீப்பன்ஷூ பூர்த்தி செய்யததால், 2018ம் ஆண்டு மே மாதம் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இத்தியாவிற்கு திரும்பிய தீப்பன்ஷூ, தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை சகிக்கமுடியாமல் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை பழிவாங்க நினைத்துள்ளார். மேலும் பல மாதங்கள் இதற்காக வேலை செய்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சர்வரை ஹேக் செய்து அங்கு பணியாற்றும் 1,200 ஊழியர்களின் கணக்குகளை நீக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்தின் சார்ப்பில் அமெரிக்காவின், கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீப்பன்ஷூ கேர்ரின் இந்த செயல் பழி தீர்க்கும் விதமாக இருக்கிறது என நிறுவனத்தின் சார்பில் வாதாடிய ரான்டி கிராஸ்மேன் கூறியுள்ளார்.
மேலும் நிறுவனத்தின் துனை தலைவர் கூறுகையில், தீப்பன்ஷூ கீர்-யின் இந்த செயல் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் மைக்ரோ சாப்ட் ஊழியர்கள் தங்கள் இ-மெயில், அறிமுகமானவர்களின் எண்களின் பட்டியல் போன்ற பல முக்கிய விஷயங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்க நீதிமன்றம் தீப்பன்ஷூவை கைது செய்வதற்காக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தற்போது வேறு வேலை விஷயமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கவிற்கு சென்றிருந்த தீப்பன்ஷூவை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளனர் நீதிபதிகள்.

மற்ற செய்திகள்
