'வேலை இழப்பு ஒருபக்கம் இருந்தாலும்...' 'இந்த விஷயம்' இன்னும் ரொம்ப ஆபத்து...! - அதிர வைக்கும் சர்வே முடிவுகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 04, 2021 10:53 PM

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கத்தால் இந்தியாவில் மீண்டும் வேலை இழப்போரின் சதவீதம் அதிகரித்துள்ளது.

increase in the percentage of people losing their jobs

கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 2021ஆம் ஆண்டு ஆகியும் முடிவடைந்த பாடில்லை. அதோடு 2020ஆன் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் தங்களின் வேலையை இழந்தனர்.

இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளும் பொருளாதார அளவில் பெரும் சறுக்கலை சந்தித்தது எனலாம். இந்த வருடமும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தால் சுமார் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதார கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறும்போது, 'இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தை விட, ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

வேலை இழப்பு ஒருபக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர் பங்களிப்பு வீதமும் குறைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.

“வேலை வாய்ப்பு குறைந்துள்ளது, இது கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையினால் இருக்கலாம்” என்று சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் நாட்டின் வேலையின்மை சதவீதம் 6.50 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒரு மாதத்தில் 7.97-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அதிகரிப்பது போல கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் வாக்சின் போடப்படும் நடைமுறைகளும் மந்தமடைவது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் வேலை இழப்பு சதவீதம் 7.97 -ஐ தொட்டுள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 7.13 சதவீதமாகவும் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Increase in the percentage of people losing their jobs | India News.