'இது பலரோட பல வருஷ கனவு...' 'TCS நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...' - கெடச்சா 'வேற லெவல்' தான்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.டி நிறுவனமான டிசிஎஸ், கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்திலும் தொழில் செய்துவருகிறது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இங்கிலாந்தில் நான்கு மடங்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஐடி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் டி.சி.எஸ் திகழ்கிறது.
இதன்காரணமாக, அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக டி.சி.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் பணிபுரிவது இளைஞர்களின் பல வருட கனவு ஆகும்.
இதுகுறித்து கூறிய இங்கிலாந்து நாட்டின் வர்த்தகத் துறை செயலாளரான லிஸ் டிரஸ், 'டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களின் ஈடுபாட்டால் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே இதுபோன்ற முதலீட்டாளர்கள் அதிகமாகத் தேவை' எனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
