என்னங்க அது டப்பாவுல..? சட்டென எடுத்துக் காட்டிய இளைஞர்.. அரசு மருத்துவமனையை ‘அதிர’ வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு அவரை கடித்துள்ளது. இதனை அடுத்து பதட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வேகமாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்களிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக ராஜா தெரிவித்துள்ளார். உடனே என்ன பாம்பு கடித்தது என டாக்டர்கள் கேட்டுள்ளனர். அப்போது டப்பாவில் வைத்திருந்த பாம்பை ராஜா காண்பித்துள்ளார். இதனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து பாம்பின் விஷத்தன்மைக்கு ஏற்ப ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். டப்பாவில் அடைக்கப்பட்டு இருந்த பாம்பை பார்த்த பிற நோயாளிகள் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்
