நீங்க ரொம்ப 'ஸ்வீட்' பாட்டி.. 86 வயதில் அடித்த லாட்டரி.. குஷியில் செஞ்ச சிறப்பான விஷயம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jan 10, 2022 04:28 PM

லாட்டரி மூலம் தனக்கு பணம் கிடைத்ததும், 86 வயது மூதாட்டி ஒருவர் செய்த செயல், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

86 yr old woman splits her lottery prize with cashier

சமூக  வலைத்தளங்களில் நாள்தோறும் பல விதமான வீடியோக்கள் வைரல் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம். அதில், சில வீடியோக்கள் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். சிலவை, நம்மை அதிகம் எரிச்சலூட்டவும் செய்யும்.

மேலும், சில வீடியோக்கள், நம் மனதைக் கவரும் வகையில், மிகவும் நெருக்கமாக தோன்ற வைக்கும். அப்படி ஒரு வீடியோ தான், சமீபத்தில் இணையத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

லாட்டரி வாங்கிய மூதாட்டி

86 வயதான மரியோன் ஃபாரஸ்ட் என்னும் மூதாட்டி, கடந்த சில தினங்களுக்கு முன் தான் வழக்கமாக செல்லும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கடை விற்பனையாளர் ஒருவர், மரியோனிடம் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

 86 yr old woman splits her lottery prize with cashier

அந்த லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு மதிப்பு சுமார் 5 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3.75 கோடி ரூபாய்) என்றும், ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் என்றும் அந்த கடை விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட அந்த மூதாட்டி, அப்படி ஒரு வேளை எனக்கு ஏதேனும் அதிரஷ்டத்துடன் லாட்டரி அடித்தால், அதில் உங்களுக்கும் பங்கு தருவேன் என தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குள்ள 'ஒரு விஷயம்' புதைஞ்சு இருக்கு.. 'அத' எடுத்தா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

பாட்டியின் சர்ப்ரைஸ் விசிட்

இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், தான் லாட்டரி வாங்கிய கடையில், சில பலூன்களுடன் மரியோன் ஃபாரஸ்ட் வந்துள்ளார். அப்போது சம்மந்தப்பட்ட அந்த விற்பனையாளரும் இருந்துள்ளார். முதல் பரிசு  கிடைக்கவில்லை என்றாலும், சுமார் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம்) பரிசு, அந்த மூதாட்டிக்கு கிடைத்துள்ளது.

லைக்குகளை அள்ளும் வீடியோ

இருந்த போதும், தான் கூறியது போலவே, தன்னுடைய பரிசு பணத்தின் ஒரு பங்கினை அந்த விற்பனையாளருக்கு அளிப்பதற்காக, கையில் பலூன்கள் மற்றும் ஒரு அட்டையுடன் மரியோன் ஃபாரஸ்ட் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

கைதட்டி வாழ்த்து

அந்த வீடியோவில், கடையைத் திறந்து கொண்டு, பலூனுடன் வரும் மூதாட்டி, தனக்கு லாட்டரி மூலம் பரிசு கிடைத்ததை சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் தெரிவிக்கிறார். தொடர்ந்து, கடை விற்பனையாளரின் பெயரைக் குறிப்பிட்டு, தான் கொண்டு வந்த பலூனையும் கொடுக்க, அங்கிருந்த மற்ற நபர்கள், கைத்தட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 86 yr old woman splits her lottery prize with cashier

அந்த மனசு தான்

பின்னர், இருவரும் மகிழ்ச்சியில் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட நிலையில், 'இந்த உலகிலேயே மிகவும் ஸ்வீட்டான நபர் இவர் தான்' என மரியோன் ஃபாரஸ்ட் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவை, மூதாட்டியின் பேரன் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

‘நடுங்குற குளிர்லயா வேலை செய்றீங்க?’ பார்த்ததும் பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசை பாருங்க..!

பலரும் லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தை, தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் நிலையில், சிறிய தொகையாக இருந்தாலும், சொன்ன வாக்கைக் காப்பாற்றும் வகையில், மூதாட்டி செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #86 YR OLD WOMAN #LOTTERY PRIZE #CASHIER #லாட்டரி #பாட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 86 yr old woman splits her lottery prize with cashier | World News.