யானை சாணத்துல இதெல்லாம் கலந்திருக்கா?? பாவம்யா அதுங்க! கலங்கும் கோவை வன ஆர்வலர்கள்.! பகீர் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pandidurai T | Jan 10, 2022 04:48 PM

கோயம்புத்தூர்: யானை சாணத்தில் முகக்கவசம், நாப்கின், மசாலா கவர்கள் என பிளாஸ்டிக் குப்பைகள் இருந்ததை கண்ட வன உயிரின

Wildlife enthusiasts sunbathe at the sight of elephant dung

ஆர்வலர்கள் மன வேதனையடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை தொடர் ஏராளமான யானைகளின் வாழ்விடமாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடிச் செல்லும் யானைகள் அடிக்கடி

வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள்  செல்வது வழக்கம். உணவுக்காக வனத்தை விட்டு வெளியே வரும்

யானைகள், குப்பை மேடுகளில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளை உட்கொள்கின்றன.

Wildlife enthusiasts sunbathe at the sight of elephant dung

அப்போது பிளாஸ்டிக் கவர்களையும் சேர்த்து உட்கொள்வதால் யானைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும்

உள்ளது.  இந்நிலையில் மருதமலை மலைக்கோயிலுக்கு செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தை, கோயம்புத்தூர் வன உயிரின பாதூகாப்பு அறக்கட்டளை தலைவரும் சூழலியல் ஆர்வலருமான முருகானந்தம் ஆய்வு செய்தார். அதில் பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின், மசாலா காவர்கள் இருந்தது தெரியவந்தது. மனிதர்கள் பயன்படுத்திய முகக்கவசங்களை  குப்பைகளிலிருந்து யானைகள் உட்கொள்வதால் யானைகளுக்கும் கரோனா பரவும் அபாயம் உள்ளது.

‘நடுங்குற குளிர்லயா வேலை செய்றீங்க?’ பார்த்ததும் பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசை பாருங்க..!

Wildlife enthusiasts sunbathe at the sight of elephant dung

இதுகுறித்து முருகானந்தம் வீடியோவில் பேசியதாவது, "மருதமலைக்கு அருகிலுள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் சுற்றுச்சூழல்

ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது.இது குறித்து வனத்துறை தரப்பிலிருந்தும்

நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்ற முடியவில்லை.

Wildlife enthusiasts sunbathe at the sight of elephant dung

வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ஐந்து யானைகள், இந்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அவ்வப்போது வருகின்றன. இங்கு யானைகள் வரும்போது அவற்றை கண்காணித்து அங்கிருந்து விரட்டி வருகிறோம். தொடர்ச்சியாக யானைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் போது அவை உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை துறை சார்ந்த அலுவலர்கள் கவனத்தில் கொண்டு சென்று யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பரபரப்பு! Couple Sharing குரூப்... மனைவிகளை விற்று சம்பாதிச்ச 7 ஆண்கள்! சிக்குனது எப்படி?

Tags : #PLASTIC WASTES #ELEPHANT DUNG #WILDLIFE ENTHUSIASTS #யானை #யானை சாணம் #வன உயிரின ஆர்வலர்கள்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wildlife enthusiasts sunbathe at the sight of elephant dung | Tamil Nadu News.