காலில் மிகப்பெரிய கட்டுடன் யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்! இப்போ எப்படி இருக்கிறார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகா ஆனந்த் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிஷெட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த தோழிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார் யாஷிகா. அதுமட்டுமின்றி, தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல எலும்பு முறிவுகளால் யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. படுக்கையில் படுத்திருக்கும் யாஷிகா, வலது காலில் கட்டுப்போட்டு, தலையணை மேல் வைத்திருக்கிறார். படத்தைப் பார்க்கும் போது, அவர் பலத்த காயத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

மற்ற செய்திகள்
