நடிகர் 'கார்த்திக்' மருத்துவமனையில் அனுமதி...! 'உடற்பயிற்சி பண்ணிட்டு இருந்தப்போ, திடீரென...' - தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 29, 2021 11:37 AM

அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக், தற்போது புதிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

Karthik admitted to hospital hit leg during an exercise

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Karthik admitted to hospital hit leg during an exercise

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கி காலில் ஆப்பரேஷன் செய்துள்ளார். தற்போது அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே, மருத்துவர்கள் நடிகர் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நவரச நாயகன் கார்த்திக் தற்போது தீ இவன், பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் அந்தகன் ஆகிய திரைப்படங்களில் முதன்மைகதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karthik admitted to hospital hit leg during an exercise | Tamil Nadu News.