உனக்கு 26 எனக்கு 62...! 'என் அழகான மனைவியை ரொம்ப லவ் பண்றேன்...' 'அல்ரெடி அவங்க 3 கணவர்களும் இறந்துட்டாங்க...' காதலை சொன்ன விதம் தான் கிளாசிக்...!
முகப்பு > செய்திகள் > உலகம்முகநூல் மூலம் நட்பாகி, பின் காதலாக மாறி தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ளது இங்கிலாந்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் துனிசியாவை சேர்ந்த 26 வயது இளைஞரின் வாழ்க்கை.
இங்கிலாந்தை சேர்ந்த 62 வயது இசபெல் டிப்பி மற்றும் துனிசியாவை சேர்ந்த 26 வயது இளைஞர் பேராமுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக்கில் நண்பர்களாகிய இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கு முன்பே மூன்று முறை திருமணமான நிலையில் கணவன்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இசபெல் தனது குடும்பத்தினருடன் துனிசியா சென்ற போது டாக்ஸி ஓட்டுநர் பேராம் கேண்டில் லைட் டின்னர் மூலம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். முதலில் தயங்கிய இசபெல் பின் பேராமின் காதலை ஏற்றுக்கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக நாடுகள் ஊரடங்கில் இருப்பதால் பேராமும் இசபெல்லும் தனித்தனியாக தங்களின் நாடுகளில் இருக்கின்றனர். இதுபற்றி இஸபெல் தன் முகநூல் பக்கத்தில் கூறியதாவது, 'இரு நாடுகளுக்கிடையே விமான சேவைகள் தொடங்கிய பிறகு பேராம் என்னைக் காண இங்கிலாந்து வந்துவிடுவார். எங்கள் காதலுக்கு வயது ஒரு தடையாய் இல்லை என்றும், பேராம் என்னிடம் இருந்து எந்த பண உதவியும் எதிர்பார்க்கவில்லை' என்று அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.
மேலும் இதற்கு பதிலாக பேராமும், தான் இசபெல்லை வயதான பெண்ணாக பார்க்கவில்லை, நல்ல குணம் உள்ள ஒரு பெண்ணாக மட்டுமே பார்த்தேன். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். கொரோனா பாதிப்பால் எங்களால் சந்திக்க முடியவில்லை. ஆனால் எனது மனைவிக்காக நான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன். என்னுடைய அழகான மனைவியை நான் அதிகம் நேசிக்கிறேன்’ என கூறியுள்ளார்.
இவர்களின் வாழ்க்கை சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரும் அவர்களின் காதலுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.