"நான் உன் கூட நூறு வருஷம் வாழணும்" RANGE'க்கு உருகிய காதலி.. லாட்டரி ஜெயிச்சதும் போட்ட 'யூ டர்ன்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகத்தில் உள்ள பல நாடுகளில், லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்ட பூர்வமாகவே செயல்பட்டு வருகிறது.

அப்படி லாட்டரி வாங்குவது மூலம், சிலரின் வாழ்க்கையில் திருப்புமுனைகள் ஏற்படும் செய்தியை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், நாட்டிங்காம்ஷையரில் வாழ்ந்து வரும் பொறியாளர் ஒருவர், லாட்டரி வென்ற பின்னர் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ள விஷயம், அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது நண்பர் ஒருவர் மூலம், Laura என்ற பெண்ணை சந்தித்துள்ளார் பொறியாளரான Kirk. விரைவில், கிர்க் வீட்டிற்கு லவுரா குடி பெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில், வாடகை எவ்வளவு தர வேண்டும் என லவுரா கேட்ட நிலையில், எதுவும் வேண்டாம் என கிர்க் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், வாரம் தோறும் லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட லவுரா, அதில் பரிசு கிடைத்தால் நாம் அதனை கொண்டு ஆடம்பரமாக வாழலாம் என்றும் கூறி உள்ளார். இதற்கு மத்தியில், அவர்கள் இடையே காதல் உருவானதாகவும் கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் லவுரா வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்துள்ளது. அதன் படி, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் பவுண்டுகள் வீதம் வழங்கப்படும் என்றும் லாட்டரி நிறுவனம் அறிவித்திருந்தது. இவை மொத்தம் 3.6 மில்லியன் பவுண்டுகள் ஆகும். முன்னதாக "Ghost Hunting" தொடர்பாக கிர்க் மற்றும் லவுரா ஆகியோர் ஒரு பொழுது போக்காக கொண்டு வந்த நிலையில், அதனை ஒரு தொழிலாக செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் தான், அவர்களின் உறவுகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. லவுராவை திருமணம் செய்ய விரும்பிய கிர்க், அவரின் பெற்றோரிடம் இதனை கூறி உள்ளார். அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், லவுராவோ நாம் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என கூறிவிட்டார்.
அது மட்டுமில்லாமல், லாட்டரி ஜெயிப்பதற்கு முன், அதில் பரிசு கிடைத்தால், இருவரும் சேர்ந்து வீடு வாங்கி ஒன்றாக வாழலாம் என திட்டம் போட்டிருந்த நிலையில் 5 லட்சம் பவுண்டுகளுக்கு வீடு வாங்கிய லவுரா தனியாக அதில் குடியேறி விட்டார்.
லாட்டரியில் பணம் கண்டதும் மாறிப் போன லவுராவை எண்ணி மனம் உடைந்து போனார் கிர்க். லாட்டரி ஜெயித்தோம் என்ற எண்ணத்தில், தனது பொறியாளர் வேலையை விடாமல் இருந்தது தான் கிர்க்கிற்கு கிடைத்த ஒரே ஆறுதல்.
லாட்டரி வென்ற சமயத்தில், அதிகம் வைரலாகி இருந்த கிர்க் மற்றும் லவுரா ஆகியோர் இடையே ஒன்றரை ஆண்டுகளில் கதை மாறிய விஷயம், பெரிய அளவில் பேசு பொருளாக இணையத்தில் மாறி உள்ளது.

மற்ற செய்திகள்
