‘காலிங் பெல் அடித்த பால் பாக்கெட் காரர்!’.. கதவைத் திறந்ததும் ‘கண்ட’ நடுங்கவைக்கும் காட்சி.. இளம் தம்பதிக்கு நேர்ந்த ‘மர்மம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் வீட்டில் இருந்த இளம் தம்பதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 28 வயதான சுக்பீர் என்பவருக்கும் 26 வயதான மோனிகா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சுக்பீர் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் நபர் வந்து அழைப்பு மணியை வெகுநேரமாக அடித்துள்ளார். ஆனால் யாரும் கதவு திறக்காததால் அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் ரத்த வெள்ளத்தில் சுக்பீரும் மோனிகாவும் சடலமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இறந்தவர்களின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் சுக்பீர் வீட்டுக்கு 4 பேர் பைக்கில் வந்ததாக சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளதாகவும், அவர்கள் தம்பதியர் இருவரையும் கட்டிப்போட்டு சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கொள்ளைக்காக இந்த கொலை நடந்ததா என்றும், அல்லது போலீசாரை திசை திருப்புவதற்காக நகை கொள்ளையடிக்கப்பட்டனவா என்றும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
