“5 மாதங்களில் காணாமல் போன காதல் மனைவி!”... ‘ரிட்டர்ன் வந்ததும் கொடுத்த ஷாக்’.. அடுத்த நொடியே கணவர் எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதல் திருமணம் செய்து, 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி வீட்டை விட்டு வெளியேறியதுடன், வேறு ஒரு ஆணை திருமணம் செய்துகொண்டதால் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜக்தேவ் என்பவரின் மனைவி ஆர்த்தி, கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அதன் பின்னர் ஜக்தேவ் போலீஸாரிடத்தில் தனது மனைவி காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஆர்த்தி, அண்மையில் தான் தனது காதலரையே திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார். இந்த் தகவலை அறிந்த ஜக்தேவ், அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்துள்ளார். இதனால் தன் வீட்டிலேயே நேற்று முன்தினம் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் நேற்று காலை ஜக்தேவ் வீட்டுக்கு அவரது மாமா ராமு வந்து பார்த்துள்ளார். அப்போது ஜக்தேவ் சடலமாக கிடந்ததை பார்த்ததும் அதிர்ந்துள்ளார். பிறகு போலீஸாருக்கு தகவல் அளித்த தகவலை அடுத்து, அங்கு வந்த போலீஸார் ஜக்தேவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.

மற்ற செய்திகள்
