என்னது...! ஷின் சான் காலேஜ் படிக்கிறாரா...! 'ஃபர்ஸ்ட் சன்னி லியோன் இப்போ ஷின் சான்...' - என்ன நடக்குது...?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Sep 01, 2020 04:46 PM

வடக்கு வங்காளத்தில் இயங்கும் சிலிகுரி கல்லூரியில் கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின் சான் நொஹாரா பெயர் இடம் பெற்றுள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shinchan name in North Bengal College BSc qualifying list

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரமான  ஷின் சான் வடக்கு வங்காளத்தில் இருக்கும் சிலிகுரி கல்லூரியில் படிப்பது போல பெயர் வெளியிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம்.

இதற்கு முன்பாக சன்னி லியோன் மற்றும் பாடகர் நேஹா கக்கருக்கு பிறகு மேற்கு வங்க கல்லூரி தகுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஷின் சான் நொஹாரா பெயர் பி.எஸ்சி (ஆனர்ஸ்) பட்டப்படிப்பின் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து கூறிய அக்கல்லூரி அதிகாரி ஒருவர், தகுதிப் பட்டியலில் வெளியான அந்த பெயர்  உடனடியாக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது புதிய பட்டியலை கல்லூரி வெப்சைட்டில் வெளியிட்டுள்ளோம். இது யார் செய்த குறும்பு வேலை என்று தெரியவில்லை. மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளோம்.

ஆன்லைன் மூலம் மாணவர்கள் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை கல்லூரி ஏஜென்சி ஒன்றிற்கு அவுட் சோர்ஸ் செய்தது. அப்போது ஏதும் குறைபாடு நிகழ்ந்திருக்க கூடும்.' எனக்கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போதய சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. சன்னி லியோன், பாடகர் நேஹா கக்கர்,  ஷின் சான் நொஹாராக்கு பிறகு யாருடைய பெயர் வெளிவரப்போவதாக ஆவலுடன் இருப்பதாக பலர் கேலி செய்து வருகின்றனர்.

Tags : #SHINCHAN

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shinchan name in North Bengal College BSc qualifying list | India News.