‘உங்களுக்கு அவ்ளோதான் லிமிட்டு’.. அம்பயரை ‘மீம்ஸ்’ போட்டு வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2020 கிரிக்கெட்13-வது சீசனின் முதல் போட்டி இன்று (19.09.2020) அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக திவாரி 42 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து விளையாடிய சென்னை அணி 19.2 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சென்னை அணியை பொருத்தவரை அதிகபட்சமாக அம்பட்டி ராயுடு 71 ரன்களும், டு பிளிஸிஸ் 58 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் வெற்றி சென்னை பதிவு செய்தது.
இப்போட்டியில் இருமுறை அம்பயர் நாட் அவுட்டை அவுட் என கொடுத்தனர். முதலாவதாக சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய்க்கு எல்பிடபுள்யூவை அம்பயர் கொடுத்தார். இதனை மறுமுனையில் நின்ற டு பிளிஸிஸ் கவனித்து முரளி விஜயிடம் ரிவ்யூ கேட்க அறிவுறுத்தினார். ஆனால் அவர் ரிவ்யூ கேட்காமல் வெளியேறினர். இதனை அடுத்து ரிவ்யூவில் பார்த்தபோது அது நாட் அவுட் என்பது தெரியவந்தது.
Seriously. That’s the easiest decision for an umpire to make. Holding the ball, incorrect disposal - it’s a bloody shambles.
— Andy Maher (@AndyMaherDFA) September 14, 2020
அதேபோல் தோனி சந்தித்த முதல் பந்தை மும்பை அணியின் விக்கெட் கீப்பர் டி காக் கேட்ச் பிடித்தார். அதற்கு உடனே அம்பயர் அவுட் கொடுத்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தோனி ரிவ்யூ கேட்டார். அதில் பார்த்தபோது நாட் அவுட் என்பது தெரியவந்தது. இதனால் சமூகவலைதளங்களில் அம்பயர்களை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
DRS DRS dhaan! 🙈 #DhoniReviewalSystem 🦁💛#WhistleFromHome #Yellove #WhistlePodu #MIvCSK
— Chennai Super Kings (@ChennaiIPL) September 19, 2020
டேய் அம்பையரு உனக்கு அவ்ளோதான் லிமிட்டு பாத்துக்க😡😡 pic.twitter.com/VGQl2KPlGN
— ஜோக்கர் (@Jokertheinsane) September 19, 2020
Umpire: out
MSD: 😂#IPL2020 • #CSKvsMI • #CSK • #WhistlePodu pic.twitter.com/d6boa5Ujfa
— Vicky 🔥 (@DevoteeOfDhoni) September 19, 2020