'டெலிவரி பண்ணனும் மேடம்... போன் நம்பர் கொடுங்க!'.. கேக் ஆர்டர் பண்ண வந்த பெண்ணின் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவேற்காட்டில் கேக் வாங்க வந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணைய தளத்தில் பதிவிட்ட நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவேலன்(36) என்பவரின் மனைவி செல்போனுக்கு அவதூறான சில அழைப்புகள் வந்ததை அடுத்து மீண்டும் அந்த நம்பருக்கு அழைத்து பேசிய போதுதான் அந்த செல்போன் நம்பர் சமூக வலைத்தளத்தில் கிடைத்ததாக ஒரு நபர் கூறியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் சமூக வலைத்தளத்தில் தனது மனைவியின் நம்பரை பதிவிட்ட நபரை கண்டறியும் முயற்சியிலும் இறங்கினார் மணிமுத்துவேலன்.
பின்னர் அவரது மனைவியின் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து செல்போன் என்னுடன் சேர்த்து சமூக வலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதைக் கண்டறிந்தார். அந்த கணக்கின் மூலமாக சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பேசும் பொழுது முத்து தரப்பினர் பெண் போன்று பேசி அவரிடம் புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணை வாங்கியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர் பேக்கரியில் பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பது தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரித்தபோது உறவினரின் பிறந்தநாளுக்கு முத்துவின் மனைவி கேக் ஆர்டர் செய்ய வந்ததாகவும் ஆனால், டெலிவரி செய்ய வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அப்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய வெங்கடேசன் , அதன் பின்னர் அந்த செல்போன் நம்பரையும் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதுதெரியவந்துள்ளது. அவரை போலீசாரிடம் முத்து ஒப்படைத்த பின்னர் அவரிடம் இந்த சிம் கார்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் வெங்கடேசனை விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
