'நைட் சாப்பிட்ட பிரியாணி, பரோட்டா'... 'திடீரென வந்த வயிற்று வலி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை துரைப்பாக்கம், ஆர்.இ.நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தினேஷ். இவர் தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே தினேஷ் நேற்று இரவு பிரியாணி, பரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் தினேஷ் வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளான். உடனே தினேஷ் சீவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து சிகிச்சை முடிந்து தினேஷ் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தினேஷை அவரது பெற்றோர் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தினேஷ் உயிரிழந்துள்ளார். மகன் உயிரிழந்த சம்பவம் அவனது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய துரைப்பாக்கம் காவல்துறையினர், சிறுவனின் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகே, இறப்புக்கான உண்மைக் காரணம் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
