'நீதிமன்ற அவமதிப்பு புகார்!'.. 'நடிகர் சூர்யா விவகாரத்தில்'.. சென்னை உயர்நீதிமன்றம் 'பரபரப்பு' உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை" என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்துள்ளது.
முன்னதாக உயிருக்கு பயந்து காணொளியில் நீதிமன்றம் நடத்துவதாகவும், ஆனால் மாணவர்களை தேர்வு எழுதச் சொல்லி நிர்பந்திப்பதாகவும், நீட் தேர்வுக்கு எதிரான தனது அறிக்கையில் நடிகர் சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த கருத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரியும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியிருந்தார்.