BGM Shortfilms 2019

'பெண்களுக்கு எதிரான குற்றங்கள்'... 'தமிழக அரசு அதிரடி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 13, 2019 01:37 PM

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, அம்மா பேட்ரோல் என்ற பெயரில், பிங்க் நிற புதிய ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

pink color amma patrol will introduce for crime against women

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மாவட்டம் தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மகளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் இந்த பிரிவே விசாரிக்கும் என காவல்துறை தெரிவித்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசு இணைந்து இந்த பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.

இதில் குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் எண் 1098, மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1091 ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். முதற்கட்டமாக, சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையத்திற்கு 35 ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட உள்ளன. அடுத்த வாரம் இந்த ரோந்து வாகனங்களை ஒப்படைக்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் , அதேபோன்று வயதானவர்களுக்கும் உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்பட உள்ளது. விரைவில் இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்கள் அனைத்திற்கும், ரோந்து வாகனங்கள் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டம் கேரள மாநிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #TAMILNADU #GOVERNMENT #PINK #PATROL #AMMA PATROL