'கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு'...'டிரஸ் இல்லாத விக்கெட் கீப்பிங்'... வைரலாகும் பிரபல வீராங்கனையின் போட்டோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Aug 19, 2019 02:02 PM

பிரபல இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட ஆடை இல்லா புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Sarah Taylor shares her nude photo goes viral

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர், பேட்டிங்யில் கலக்கியதோடு மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங்யிலும் கலக்கி வந்தார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதனிடையே சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத அவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அவரை குறித்து மீண்டும் பேச வைத்துள்ளது.

இங்கிலாந்தில் வெளிவரும் நாளிதழ் ஒன்று மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வவை பரப்பி வருகிறது. அந்த நாளிதழுக்கு சாரா டைலர் போட்டோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதாவது ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டதற்கான காரணத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதிவில் '' என்னை குறித்து தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை எனக்கு கொடுத்தது. இருந்தாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான்'' என குறிப்பிட்டுள்ளார். சாரா டைலரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #SARAH TAYLOR #ENGLAND WOMAN CRICKETER #NUDE #WICKET KEEPING