‘பத்திரிகை சுதந்திரத்தின் இருண்ட தருணம்’ .. விக்கிலீக்ஸ் நிறுவனர் கைதுக்கு ஸ்நோடன் விமர்சனம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 11, 2019 04:47 PM

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே ஈக்வேடார் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Wikileaks Co founder Julian Assange arrested in london

விக்கி லீக்ஸின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவலண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த தகவல் இணையதளத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது. ஜூலியனின் கைது பற்றி பேசிய போலீசார், ‘ஈக்வேடார் தூதரகம் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஏற்கனவே கொடுத்த அடைக்கலத்தை வாபஸ் பெற்றதால் தூதரக அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்துள்ளதாகவும், மேலும் அவர் விரைவில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்வீடனுக்கு அசாஞ்சே அனுப்பப்பட்டால்தான் அமெரிக்காவால் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக ஜூலியன் அசாஞ்சேவின், முக்கியமான ஆதரவாளரான ஜான் பில்கர், ஜூலியனை விடுவிக்கச் சொல்லி ஈக்வேடார் தூதரகத்தின் முன்பாக பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க அரசின் மற்றும் அமெரிக்க நாட்டின் மிக முக்கியமான பல ரகசியங்கள் அடங்கிய பல்வேறு தகவல்களைத் தனது விக்கி லீக்ஸ் மூலம் வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சே 47 வயதானவர். அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருந்தபோதுதான், லண்டனில் ஈக்வடார் தூதரகத்தில்  கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஜூலியன் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார்.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் கூட, ட்ரம்ப்பின் தரப்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இமெயில் தகவல்களை விக்கிலீக்ஸ் மூலமாக வெளியிட்டதன் காரணமாக ஜூலியன் அசாஞ்சேவுக்கு இணையதள பயன்பாடு மறுக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது தடாலடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.‌

முன்னதாக அமெரிக்காவின் சில முக்கிய அஞ்ஞான நோக்கங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்நோடன், பின்னர் அமெரிக்க அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளியானார். தற்போது ரஷ்யாவில் வசித்துவரும் இவர், இந்த கைது நடவடிக்கையினை பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம் என்று விமர்சித்துள்ளார். 

Tags : #JULIANASSANGE #WIKILEAKS