மெட்ராஸ் சென்ட்ரல் அப்டேட்: 'ரயில் நிலையத்துல மட்டும் இல்ல, ரயிலிலும் மாறிய பெயர்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 09, 2019 05:11 PM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தற்போதுதான் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் பெயர் சூட்டப்பட்டதாக தமிழக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுகவினரும் தமிழக அரசும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்ஜிஆர் பெயரை சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவ்வாறே பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடியும் வாக்கு கொடுத்திருந்தார்.
தமிழக அரசின் இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்த மத்திய அரசின் ஒப்புதலோடு உள்துறை அமைச்சகமும், துரிதமாக இந்த கோரிக்கைக்கு இசைந்து கொடுத்ததை அடுத்து, தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்கிற பெயரோடு அழைக்கப்படுகிறது.
பின்னர் சென்னை ரயில் நிலையத்தின் அனைத்து பெயர்ப் பலகைகளிலும் இந்த பெயர் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் ரயில் பெட்டிகளிலும் இதே பெயர் முழுவதுமாக கேபிடல் லெட்டர்களில் அதே சமயம், அளவில் சிறியதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. சட்டென பார்த்தால் ஊர் பெயர் போல தெரியும். நன்றாக உற்றுப்பார்த்தால் மட்டுமே புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று புரியும் நிலை உள்ளது.
பலரும் இந்த பெயரை ஊர் பெயர் என்று நினைத்து படிப்பதாகக் கூறுவதால் பெரும் குளறுபடிகள் உண்டாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த புதிய மாற்றங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
