‘வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் ஆசிரியர்’.. கதறி அழுத மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 09, 2019 07:05 PM

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே தூக்கில் தொங்கியதை தாங்கிக்கொள்ள முடியாமல், மாணவர்கள் கதறி அழுதுள்ள சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bizarre - Chennai Private School hangs himself inside the class room

நீலாங்கரையில் உள்ள சரஸ்வதி நகரில் செயல்படும் தனியார் பள்ளிக்கு வழக்கம் போல் வந்த மாணவர்கள் சிலர், ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியாகி உடனே, பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் கூறினர். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததோடு, ரத்தத் துளிகள் சொட்ட சொட்ட தூக்கிட்டு தொங்கிய ஆசிரியரை இறக்கி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணமாகாத ஆசிரியர் அந்தோணி ஜெனிபர், 8-ஆம், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்ததோடு, தான் பணிபுரியும் பள்ளியில் உள்ள 8-ஆம் வகுப்பின் அறையிலேயே தங்கி வந்தவர். அங்குதான் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சக ஆசிரியர்கள் உட்பட எல்லோரிடமும் நல்ல விதமாய் பழகும் பாங்குடைய அந்தோணி ஜெனிபரின் பெயரில், ஜெனிபர் என்பது அந்தோணியின் தாய் பெயர்.

இதுவரையில் யாருடனும் எவ்வித கருத்து மோதலும் இல்லாமல் ஆசிரியர் அந்தோணி இருந்துள்ளதாக அப்பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சியான சம்பவத்துக்கு பிறகு மாணவர்கள் உடனே வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, பல மாணவர்கள் தங்களின் ஆசிரியர் இறந்துபோனதை தாங்கிக்கொள்ள மனமின்றி குமுறிய சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #SUICIDE #SAD #TEACHER #CHENNAI