'எம்.ஜி.ஆர் குறித்து சீமான் வைத்த விமர்சனம்'... 'இது சீமானுக்கே ஆபத்தாக முடியும்'... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எம்.ஜி.ஆர் அப்படி என்ன நல்லாட்சி தந்தார், எனச் சீமான் வைத்த விமர்சனம் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீமான் பேசுகையில், ''பரப்புரையில் எம்.ஜி.ஆர் குறித்துப் பேசினால் அதிமுகவின் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். ரஜினியும், கமலும் எம்ஜிஆரைத் தூக்கிப் பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்குத்தான் செல்லும். எம்.ஜி.ஆருக்கு பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் அவர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. மற்றபடி அவர் நல்லாட்சி தந்தார் என்ன கூற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சியை தன்னால் கொடுக்க முடியும் என ரஜினிகாந்த்தும், எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என கமல்ஹாசனும் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே எம்.ஜி.ஆர் மீது சீமான் வைத்த விமர்சனத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''எம்.ஜி.ஆர் மீது புழுதி வாரித் தூற்ற நினைத்தால் அது அவருக்கே ஆபத்தாக முடியும். எம்.ஜி.ஆரின் புகழை யாராலும் அழிக்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
