'இந்தியாவின் இந்த நகரத்தில் 'காண்டம்' பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு'... 'ஆனா பெண்களின் கருத்தடை மாத்திரை'?... பின்னணி காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 23, 2020 03:22 PM

ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதோடு, பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் வழிவகுக்கவும் செய்கிறது. இதனிடையே மத்திய அரசின் கணக்கெடுப்பு ஒன்றில் ஆணுறை பயன்பாடு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

NFHS Report Finds Condom Use Increased in Mumbai

ஆணுறைகள் லாக்ச் அல்லது பாலியூரேனால் என்ற ரப்பரால் தயாரிக்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆணுறைகள் குறித்த  விழிப்புணர்வு பலருக்கு இல்லாத நிலையில், தற்போது அதுகுறித்த புரிதல் என்பது பலருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி ஆண்கள் குழந்தை பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு அதிக விருப்பம் காட்டுகிறார்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் ஆணுறையின் பயன்பாடு என்பது கடந்த நான்கு ஆண்டுகளில் 7.1% லிருந்து 10.2% ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் ஆணுறையின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில், இந்தியாவின் மும்பையில் ஆணுறைகள் பயன்பாடு இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்கள் மத்தியில் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2.4 சதவீதத்திலிருந்து இப்போது 1.8 சதவீதமாகக் கிட்டத்தட்ட 1% குறைந்துள்ளது.

NFHS Report Finds Condom Use Increased in Mumbai

கருத்தடை மாத்திரைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண் கருத்தடை 49.1% ஆகக் குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மும்பையில் ஆணுறை பயன்பாடு இரு மடங்காக அதிகரித்தாலும், பிறப்பு கட்டுப்பாடு (birth control) தொடர்ந்து பெண்ணின் பொறுப்பாக உள்ளது.

மும்பையில், திருமணமான தம்பதிகளில் பத்தில் ஏழு பேர் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைச் சார்ந்துள்ளனர்.ஒட்டுமொத்தமாக, 17 மாநிலங்களில் நவீன கருத்தடை முறைகளின் (modern contraceptive methods) பயன்பாடு அதிகரித்துள்ளது என்று NFHS அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. NFHS Report Finds Condom Use Increased in Mumbai | India News.