‘கையோட ஓட்டு போடுங்க.. மையோட வாங்க.. பைக் சர்வீஸ் இலவசம்’.. பிரபல நிறுவனம் அதிரடி ஆஃபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 15, 2019 06:18 PM

ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஜனநாயக முறைப்படி மக்களின் ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் கடமையை ஊக்குவிக்கும் வகையில் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் புதிய சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

Hero Motorcorp announces free bike service schemes to encourage voting

மிகப்பெரும் ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சமூக ஆர்வல நிறுவனங்களும், பொது மற்றும் தனியார் நிறுவனங்களும் தத்தம் பங்களிப்பை வழங்கி வருகின்றன.

அவ்வகையில் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம், இந்த மக்களவைத் தேர்தலில் ஓட்டு போடும் கடமையை வலியுறுத்தி பைக் சர்வீஸ் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஹீரோ மோட்டார்கார்ப் டீலர்ஷிப் இடங்கள், ஷோரூம், வொர்க் ஷாப்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சலுகைகளைப் பெற ஹீரோ பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் தாங்கள் வாக்களித்த அடையாள மையுடன் செல்லவேண்டும்.

அங்கு இலவச பைக் சர்வீஸ், வாட்டர் சர்வீஸ் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இதில் வாட்டர் சர்வீஸ் முற்றிலுமாக இலவசமாகவும், பைக்கில் குறிப்பிட்ட பைக் மாடல்களுக்கு மட்டுமான சர்வீஸ்கள்களுக்கு 199 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹீரோ மோட்டார்கார்ப் தன்னுடைய கிளையை வைத்திருக்கும் ஒவ்வொரு நகரத்திலும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் இத்தகைய சலுகையை வாக்குப்பதிவு தொடக்க நாளில் இருந்து அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ELECTIONS #LOKSABHAELECTIONS2019 #HEROMOTORCORP