"பாப்பாக்கு வயசு என்ன'?...'இரண்டு'...அட இன்னுமா பெயர் வைக்கல?...பிரச்சாரத்தில் கலகலப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 13, 2019 01:31 PM

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இறுதி கட்ட பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.பல்வேறு தலைவர்களும் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Udhayanidhi Stalin election campaign at Dindigul

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு இடங்களுக்கும் திறந்த வேனில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.இந்நிலையில், திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் உதயநிதி வேனில் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு நடந்த சம்பவம் கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பிரச்சார கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர்,தன் குழந்தையை தூக்கி கொண்டு உதயநிதி நின்று கொண்டிருந்த வேனின் அருகில் வந்தார்.உடனே உதயநிதியிடம் குழந்தையை கொடுத்து அதற்கு பெயர் வைக்கும் படி கேட்டார்.ஆனால் அந்த குழந்தை 2 வயது மதிக்கத்தக்க வகையில் இருந்தது.அந்த குழந்தையை தூக்கி கொண்ட உதயநிதி ஸ்டாலின், "ஏம்மா,இன்னுமா உனக்கு பெயர் வைக்கவில்லை என கேட்டு சிரித்தார்.

பிறகு அந்த குழந்தையிடம் பாப்பா உனது பெயர் என்ன என்று கேட்க அதற்கு ''சோபிகா'' என்று அழகாக கூறியது.இதனிடையே உதயநிதி கையில் மைக் இருந்ததால் அந்த குழந்தை கூறியது,அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக கேட்டது.

இதனால் கூட்டத்தில் பலமான சிரிப்பலை எழுந்தது.உடனே குழந்தையை அதன் அம்மாவிடம் கொடுத்த உதயநிதி 'இந்த பெயரே நல்லா இருக்கு,குழந்தைக்கு வேற பெயர் வேண்டாம்,வெயிலில் நிற்காமல் ஒதுங்கி நில்லுங்கள்' என கூறினார்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #DMK #MKSTALIN #UDHAYANIDHI STALIN