'என்னால ஓட்டு போட முடியாது'...'தேர்தல் தூதுவராக' இருக்கும்...பிரபல 'கிரிக்கெட் வீரரின்' நிலை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 15, 2019 12:51 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் தூதருமான ராகுல் டிராவிட்டிற்கு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் தடுப்பு சுவர் என அழைக்கப்படுபவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான ராகுல் டிராவிட், கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் தூதராக இருக்கிறார்.இவர் விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் மக்களை 100% வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வரும் அவருக்கே,வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகரில் வசித்து வந்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆர்.எம்.வி தொகுதிக்கு உட்பட்ட அஸ்வந்த் நகர் பகுதிக்கு தன்னுடைய குடியிருப்பை மாற்றினார்.இதன் காரணமாக இந்திரா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படுவதற்கான ஆவணங்கள் டிராவிட்டின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் ஆர்.எம்.வி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆவணங்களை ராகுல் டிராவிட் சமர்பிக்கவில்லை என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
