'ஏப்ரல் 18 ஒரு முக்கியமான வேலை இருக்கு'...ஒளிபரப்பை நிறுத்த போகும் 'பிரபல தொலைக்காட்சி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Apr 13, 2019 12:20 PM
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடந்தது. இத்துடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்தன. இதில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.முதல்கட்ட வாக்குப்பதிவில், அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 80.9 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பீகாரில் 50.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன

இதனிடையே தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இறுதி கட்ட பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.பல்வேறு தலைவர்களும் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மக்களை 100 சதவீதம் வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் குறும்படங்களை வெளியிட்டது.இதனிடையே மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்ப மாட்டோம் என பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான 'ஜீ தமிழ்' அறிவித்துள்ளது.
''அதை விட மிக முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது.அது தான் வாக்களிப்பது''என ஜீ தமிழ் குறிப்பிட்டுள்ளது.ஜீ தமிழ் எடுத்திருக்கும் இந்த முடிவினை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
