‘வெள்ளையா இருக்கவரு பொய் சொல்ல மாட்டாருன்னு’ நம்பி ஓட்டு போட்ருக்காங்க.. தேர்தல் முடிவு குறித்து சீமான் ஆவேசம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 24, 2019 04:43 PM

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடிக்க அமமுக, நாதக, மநீம ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

seemans statement about kamal hasan after loksabha election results

இதில் அமமுக 4.8 சதவிகித வாக்குகளைப் பெற்று  3வது இடத்தைப் பெற்றுள்ளது . 38 தொகுதிகளில் 37-ல் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி 4 சதவிகித வாக்குகளுடன் நான்காவது இடத்திலும், 3.78 சதவிகித வாக்குகளுடன் மநீம  ஐந்தாவது இடத்திலும் உள்ளன. வடசென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 15 தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில் இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த சீமான் கமல் குறித்த கேள்விக்கு, “50 வருடம் நடித்துள்ள அவருக்கு மக்களிடம் என்னை விட நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள் வெள்ளையாக இருப்பவர் பொய் சொல்ல மாட்டார் என்ற என்ற நம்பிக்கையில் ஓட்டுப் போட்டுள்ளார்கள். உழைக்கும் எங்களை அழுக்கானவர்களாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இதே தோல்வியை அடுத்த தேர்தலிலும் எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பாரா எனத் தெரியவில்லை. அடுத்த தேர்தலில் 117 இடங்களை ஆண்களுக்கும், 117 இடங்களைப் பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்து  தனித்துப் போட்டியிடுவோம். ரஜினி வரும்போது இதை விடப் பெரிய சலசலப்பு இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

Tags : #LOKSABHAELECTIONRESULTS2019 #NTK #SEEMAN #MNM #KAMAL