நாங்கள் ஏற்கனவே அறிவித்தை போல.. பரபரப்பான வெற்றிக்கு பின் தொல்.திருமாவளவன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 24, 2019 04:35 PM

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உருக்கமாக பேசியுள்ளார்.

Thol Thirumavalavan won Chidambaram constituency

மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள கட்சி தேர்தலை சந்தித்தது. இதில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே தொல்.திருமாவளவன் மற்றும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகிய இருவரும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தனர். இதனை அடுத்து பரபரப்பாக காணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் தொல்.திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,‘பானை சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசைவழியில் பயணித்தாலும் தமிழகம் எப்போதும் சமூக நீதியின் வழியில் அறத்தின் வழியில் பயணிக்கும் என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது. அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமளவு வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் எடுபடவில்லை. தமிழக மக்கள் வழங்கியிருக்கிற இந்த தீர்ப்பு தமிழ்மண்ணில் சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இடமில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags : #LOKSABHAELECTIONRESULTS2019 #ELECTIONRESULTS2019 #THOLTHIRUMAVALAVAN #VCK