மறைந்த 'சித்ராவின்' கணவர் 'ஹேம்நாத்' மீண்டும் 'கைது'... பின்னணியிலுள்ள 'பரபரப்பு' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்தாண்டு டிசம்பர் மாதம், சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தாண்டு, மிக விமரிசையாக தனது திருமணத்தை நடத்த சித்ரா திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும், சித்ரா சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவது ஹேம்நாத்திற்கு பிடிக்காமல் சித்ராவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும், இதனால் அதிகம் மன உளைச்சலில் இருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பண மோசடி செய்ததன் பெயரில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு, இருவரிடம் இருந்து மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் வரை ஹேம்நாத் மோசடி செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
