'நடிகை' சித்ரா 'தற்கொலை' விவகாரம்... 'கணவர்' ஹேமந்த் மீது 'அதிரடி' நடவடிக்கை எடுத்த காவல்துறை... 'விசாரணை'யில் தெரிய வந்த பரபரப்பு 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஒன்பதாம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் தற்கொலை சின்னத்திரை வட்டாரம் மட்டுமில்லாது அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவுடன் தனியார் ஹோட்டலில் அவரது கணவர் ஹேம்நாத்தும் தங்கியிருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்றும், ஹேமந்த் தான் காரணம் என்றும், சித்ராவின் பெற்றோர்கள் உட்பட உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரும் குற்றஞ்சாட்டினர். ஆனால், பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்தது உறுதியான நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில் முதற்கட்டட விசாரணையில், சித்ராவும், ஹேம்நாத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேமந்த்திடம் கடந்த ஆறு நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஹேமந்த் அடிக்கடி சித்ராவுடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய பெயரில் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
