VIDEO : "அந்த ஒரு 'MOMENT'-க்காக தான் நான் 'தளபதி'ய நேர்ல பாக்காம இருந்தேன்..." 'சித்ரா' சொல்லியிருந்த 'காரணம்'... மனம் நொறுங்கச் செய்யும் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சின்னத்திரை நடிகை சித்ரா இரண்டு தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தனது வருங்கால கணவருடன் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு வைத்தே தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மறைவு, சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, சித்ராவின் பெற்றோர்களும் நெருங்கிய நண்பர்களும் தெரிவித்திருந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, என்ன காரணத்திற்காக சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பதை கண்டுபிடிக்க வேண்டி ஹேமந்த் மற்றும் சித்ராவின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சித்ரா வீடியோ ஒன்றில் நடிகர் விஜயை நேரில் சந்திப்பது குறித்து பேசியிருந்ததை விஜய் ரசிகர்கள் உருக்கத்துடன் பகிர்ந்து வருகின்றனர். தனது திருமணத்திற்காக விஜய்யை அழைக்க வேண்டித் தான் இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்ததாக குறிப்பிட்ட சித்ரா, அவருக்கு வயதாக வயதாக இளமை கூடிக் கொண்டே இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளதால் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமல் போனது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
Mrg -க்கு Invite பண்ணனும் -னு தான் தளபதிய இன்னும் பாக்காமா இருந்தாங்கலாம் .. 💔🚶#Master @actorvijay pic.twitter.com/JP27T3fxVx
— Sᴀᴋᴛʜɪ ᴠꜰᴄ ❗️ (@Sakthii_VFC) December 10, 2020

மற்ற செய்திகள்
