'சித்ரா' கடைசியாக அனுப்புன 'ஆடியோ' மெசேஜ்... குரல் கேட்டு 'உடைந்து' போன ரசிகர்கள்... 'வைரல்' ஆடியோ!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்திலும், அவரது ரசிகர்களிடையேயும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அதிக கவனத்தை ஈர்த்த நடிகை சித்ரா, சென்னையிலுள்ள ஹோட்டலில் வைத்து தற்கொலை செய்து கொண்டார். சித்ரா இப்படி தற்கொலை செய்து கொள்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
எப்போதும் மிகவும் கலகலப்பாக அனைவரிடமும் பழகும் குணம் கொண்ட சித்ராவின் முடிவால் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், கடைசியாக தனது நண்பரும், விஜய் டிவி நடிகருமான மதன் என்பவருக்கு இன்ஸ்டா மூலம் கடைசியாக சித்ரா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் மதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த சித்ரா, நாம் இருவரும் இருக்கும் புகைப்படத்தை தேடிய போது கிடைக்கவில்லை என்றும், உன்னிடம் இருந்தால் எனக்கு அனுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அவரது மறைவால் மிகவும் துவண்டு போயிருக்கும் அவரது ரசிகர்கள், இந்த ஆடியோவில் அவரது குரலைக் கேட்டு மேலும் உருகிப் போயுள்ளனர்.

மற்ற செய்திகள்
