"'சித்ரா' தற்கொலை 'முயற்சி' பண்ணுறது இது 'முதல்' தடவ கெடயாது..." வெளியான 'அதிர்ச்சி' தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்திலும், அவரது ரசிகர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சென்னையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்து சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆளில்லை என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சித்ராவின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என உடற்கூராய்வில் தெரிய வந்தது.
சித்ரா மற்றும் ஹேமந்த் ஆகியோருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல், சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் ஹேமந்த்தும் ஹோட்டலில் இருந்துள்ளார். இதனால், அவரிடம் கடந்த ஆறு நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு போலீசார் ஹேமந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஹேமந்த் அடிக்கடி சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்தும் சித்ராவிடம் ஹேமந்த் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்த மன உளைச்சலில் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இத்துடன் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை சித்ரா தற்கொலைக்கு முயற்சி செய்வது இது ஒன்று முதல் முறை இல்லையாம். ஏற்கனவே ஒரு முறை அவர் தூக்க மாத்திரை போட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
சித்ரா சில ஆண் நடிகர்களுடன் நடிப்பது பிடிக்காமல் ஹேமந்த் தொடர்ந்து பிரச்சனை செய்ததாலும், தங்களது திருமணத்தை மிகப் பெரிய அளவில் அடுத்த ஆண்டு சித்ரா நடத்த திட்டம் போட்டிருந்த நிலையில், அதற்கு ஹேமந்த் சிறிதளவில் கூட உதவி செய்யாமல் இருந்ததாலும் அதனால் சித்ரா அதிகம் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
