VIDEO : "எப்போவும் போல 'இந்த' ஒரு விஷயம் அவ நேத்து பண்ணல..." கடைசி 'வீடியோ' எடுக்குறப்போ கூட..." நடிகை 'சரண்யா' பகிர்ந்த 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் 'முல்லை' என்ற கதாபாத்திரம் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
இவரது மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல சின்னத்திரை பிரபலங்கள் இடையேயும் கடும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், சின்னத்திரை நடிகையும், சித்ராவின் தோழியுமான சரண்யா Behindwoods சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் சித்ரா மரணம் குறித்து பேசிய சரண்யா, 'கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்ராவை எனக்கு நன்கு தெரியும். இப்போது வரையும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக தான் நாங்கள் இருந்தோம். சித்ரா இறந்ததாக தகவல் கிடைத்ததும் என்னால் அதனை நம்ப முடியவில்லை. இப்போது வரையும் என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நேற்று இருவரும் சேர்ந்து டிவி ஷோ ஒன்றில் கலந்து கொண்டோம். அதற்கான ஷூட்டிங் முடிவடைந்த பின்னர், இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். அப்போது கூட சித்ரா எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக தான் இருந்தாள். அப்படி பேசும்போது தாங்கள் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதை என்னிடம் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல், நடக்க இருக்கும் திருமணம் குறித்தும், வாழ்க்கையை குறித்தும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், வழக்கம் போல தான் கலந்து கொள்ளும் ஷூட்டிங்கில் அதிகம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடும் சித்ரா, நேற்று அதிகமாக புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. முன்னதாக, தான் காதலிக்க ஆரம்பித்ததையும், தனக்கு திருமணம் நிச்சயமானது குறித்தும் என்னிடம் தாமாதமாக தான் பகிர்ந்து கொண்டார்' என தெரிவித்துள்ளார்.
முழு வீடியோவைக் காண:

மற்ற செய்திகள்
