'மனைவி சித்ராவை டார்ச்சர் செய்ததாக கைது செய்யப்பட்ட ஹேம்நாத்!'... சிறைக்கு சென்று நேரில் சந்தித்த தந்தை செய்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவன் ஹேம்நாத்தைச் சென்று சந்தித்து அவரது தந்தை ஆறுதல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![chithra father in law visits his son hemnath in jail chithra father in law visits his son hemnath in jail](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/chithra-father-in-law-visits-his-son-hemnath-in-jail.jpg)
2020 டிசம்பர் 9-ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆறு நாட்கள் சித்ராவின் கணவர் மற்றும் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஆர்டிஓ அதிகாரிகள் தொடர்ந்து பல உண்மைகளை வாங்கிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் நசரத்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் ஹேம்நாத்தை அதிரடியாக கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக சித்ராவின் தற்கொலையை தொடர்ந்து சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவருடைய கணவர் தான் என்று சித்ராவின் சக நடிகர் நடிகையர் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் என பலரும் கூறி வந்தனர். இதனிடையே சித்ராவின் தாயார் விஜயாவும் தனது மகளை ஹேம்நாத் அடித்துக் கொன்று விட்டார் என அதிரடியாக குற்றம் சாட்டினார். ஆனால் ஹேம்நாத்தின் பெற்றோர் இதை மறுத்து வரவே ஹேம்நாத் நசரத்பேட்டை போலீசாரால் தொடர்ந்து காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அப்போது இன்னும் பல உண்மைகள் தெரிய வந்தன. அதன்படி சித்ராவை ஹேம்நாத் சந்தேகப் பட்டதாகவும் அதைத்தொடர்ந்து பலவிதமான வார்த்தைகளை பேசி சித்ரவதை செய்வதாகவும் அவரே வாக்குமூலத்தில் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இன்னொருபுறம் சித்ராவுக்கு இருந்த பண நெருக்கடி உள்ளிட்டவையும் ஹேம்நாத்தை வரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்வதை தவிர்க்க சொல்லி சித்ராவின் தாயார் கொடுத்து வந்த அழுத்தமும் சித்ராவின் மன உளைச்சலுக்கு காரணம் என்று கூறப்பட்டாலும் சித்ராவின் தற்கொலைக்கு முதல் நாள் இரவு சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வருகிறது.
குறிப்பாக சித்ராவின் நடிப்பு, அந்த துறையில் அவர் நெருங்கி யாருடன் நடிக்கிறார் ,உள்ளிட்ட விபரங்களை கேட்ட ஹெம்நாத், சித்ராவை சந்தேகப் பட்டதுடன், தொடர்ந்து சித்ராவை படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று கண்காணித்து வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் ஹேம்நாத் சித்ராவிடம் செத்து தொலை என்று கடுமையாக கூறியதாக கூறப்படுகிறது. இதனிடையே ஹேம்நாத்தை அழைத்து விசாரிக்க ஆர்டிஓ அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அதிரடியாக நசரத்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எனினும் ஹேம்நாத்தை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பு தந்து அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு பொன்னேரி கிளை சிறை நிர்வாகத்துக்கு ஆர்டிஓ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில்தான் ஹேம்நாத்தை சிறைக்கு சென்று அவரது தந்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக யாரை காப்பாற்றுவதற்காக தன் மகனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என ஹேம்நாத்தின் தந்தை கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)