“இதோ சிதம்பரம் தொகுதியின் கள நிலவரம்’! முன்னிலையில் யார்”?.. வெற்றி வாகைசூடப்போவது யார்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 23, 2019 03:05 PM

17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

vck chief leads in chidambaram constituency

மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (23/05/2019) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில், திமுக கூட்டணியுடன் சேர்ந்து பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவில் உள்ளார்.

இந்நிலையில், காலை முதல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொகுதியில் மட்டும் இழுபறி நீடித்து கொண்டே இருந்தது. இதனையடுத்து, தற்போது அதிமுக வேட்பாளர் பொன்.சந்திரசேகரை விட குறைந்த வாக்குகளை பெற்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவில் உள்ளார்.