சுஜி, நீயும் எனக்கு 'பொண்ணு' மாதிரி தான்மா...! - ஒரு குறையும் இல்லாம 'சிறப்பா' நடந்த வளைகாப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாய்க்கு சீமந்தம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல். சக்திவேலும் அவரது குடும்பத்தாரும் தங்கள் வீட்டில் டாபர்மேன் வகையைச் சேர்ந்த பெண் நாயை வளர்த்து வருகிறார்.
சுஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த பிராணி வீட்டில் உள்ள அனைவரையும் காட்டிலும் சக்திவேலுடன் தான் பாசமாக இருக்குமாம். இந்நிலையில் சுஜி இப்போது கர்ப்பமாகியுள்ளது.
தங்கள் பிள்ளைகளில் ஒன்றாகவே சுஜியை பார்த்த சக்திவேல் மற்றும் குடும்பத்தார் சுஜிக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று குடும்பத்தார் முன்னிலையில் அனைவரின் ஆசீர்வாததோடு கலர் வளையல்கள் அணிவிக்கப்பட்டும், மாலை போடப்பட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதோடு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 5 வகை சாதங்களும் சுஜிக்கு பரிமாறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

மற்ற செய்திகள்
