‘கை தவறிவிழும் ஒவ்வொரு சுத்தியலுக்குக் கீழும் ஒரு நேசமணி வாழ்கிறார்’.. ட்ரெண்டாகும் #PRAYFORNESAMANI

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 30, 2019 11:19 AM

பாகிஸ்தானில் இயங்கிவரும் கட்டுமான நிறுவனத்தின் சிவில் எஞினியர்ஸ் ட்விட்டர் பக்கம் ஒன்றில் சுத்தியலின் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, இதன் பெயர் என்ன என்று கேட்டுள்ளது. அதற்கு விக்னேஷ் பிரபாகர் என்கிற நம்மூர் சேட்டைக்கார இளைஞர், ‘இதன் பெயர் சுத்தியல் என்றும், இது காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்’ என்றும் பதில் பதிவிட்டுள்ளார்.

vadivelus epic character nesamani hashtag is trending world wide

உடனே, இந்த விஷயம் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. நம்மூர் மிமி மற்றும் ட்ரெண்ட் செட்டர்களுக்கு இது போதாத ஓய்வுக்காலம் போலும். அவர்கள் இதுதான் சமயம் என்று காண்ட்ராக்டட் நேசமணி என்கிற பெயரை வைத்து ட்ரெண்ட் செய்யத் தொடங்கியதோடு, ப்ரே ஃபார் நேசமணி என்றும், சுத்தியல் படக் - நேசமணி லொடக் என்றும் ஆணி புடுங்கபோகும்போது நிகழ்ந்த விபத்து என்றும் பலவிதமான ட்ரெண்டிங் கலாட்டா மிமிக்களை உருவாக்கி இணையதளத்தில் உலவ விட்டுள்ளனர்.

விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் காண்ட்ராக்டர் நேசமணியாக நடித்த வடிவேலுவின் இந்த கதாபாத்திரம்தான் தர்போது ட்ரெண்டாகி வருகிறது. தவிர, வடிவேலுவின் தம்பி மகனாக அதில் கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரில் வரும் ரமேஷ் கண்ணாவின் கதாபாத்திரமும் இதில் ட்ரெண்டாகிவருகிறது.

தவிர, காண்ட்ராக்டர் நேசமணியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் 2 இட்லி, ஒரு கலக்கி சாப்பிட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் அவரது உடல்நிலையை நெருக்கமாக கவனித்து வருவதாகவும் பிரபல மருத்துவமனை ஒன்று அறிக்கை வெளியிட்டது போலவும் இணையத்தில் மீம்ஸ்கள் பறக்கின்றன. விக்னேஷ் பிரபாகர் என்கிற இணையவாசிதான் இதனை ட்ரெண்ட் செய்துள்ளார். 

தவிர, மோடி 2வது முறை பிரதமராக ஆட்சியமைப்பதனால் #ModiSarkar2 என்கிற ஹேஷ்டேகை பின்னுக்குத்தள்ளியிருக்கிறது #Nesamani ஹேஷ்டேக். இதேபோல், பாஜக ஆதரவாளர்கள் சவுகிதார் என்று பெயருக்கு முன்னாள் சேர்த்துக்கொள்வதுபோல், பலரும் பெயருக்கு முன்னாள் காண்ட்ராக்டர் என்று சேர்த்துக்கொள்கின்றனர். 

Tags : #PRAYFORNESAMANI #TRENDINGNOW #VIRAL