'சுயநலத்துக்காக பலரது வாழ்க்கய அழிச்சவரு..'.. முன்னாள் கிரிக்கெட் வீரரைப் பற்றி இந்நாள் வீரரின் ட்வீட்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 07, 2019 07:00 PM

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ஃரிடி பல வீரர்களின் வாழ்வினை அழித்தவர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் பர்கத் பதிவிட்டுள்ள ட்வீட்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

Afridi was a selfish player who ruined many careers,Says Imran Farhat

அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் பர்கத், அஃப்ரிடி பற்றி அடுத்தடுத்த 3, 4 ட்வீட்களில் பொங்கி எழுந்துள்ளார். முதலில் அஃப்ரிடியின் ‘கேம் சேஞ்சர்’ புத்தகத்தை படித்தவர்கள் சொல்வதை கேட்கும்போதும், தான் படித்தவரையிலும், தனக்கு வெட்கமாக இருந்ததாக ட்வீட் பதிவிட்டு பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கினார்.

மேலும் அஃப்ரிடி தனது உண்மையான வயதை மறைத்து நல்லவர் போல் இருந்துவிட்டு, தற்போது மதிப்புடன் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை விமர்சித்து வருவதாகவும் இம்ரான் பர்கத் குற்றம் சாட்டியுள்ளார்.  தொடர்ந்து அப்ஃரிடி பற்றிய நிறைய கதைகள் தம்மிடமும், இன்னும் பல வீரர்களிடமும் இருப்பதாகவும் கூறியுள்ள இம்ரான் பர்கத் அந்த வீரர்கள் எல்லாம் முன்வந்து இதுபோன்ற ஒரு சுயநலவாதியின் உண்மையான முகத்தை தோலுரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு நேரடியாகவும் காட்டமாகவும் பல ட்வீட்களை பதிவிட்டுள்ள இம்ரான் பர்கத், தன் சுயநலத்துக்காக பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்வினை அழித்தொழித்த அஃப்ரிடி, தனக்கு இருக்கும் திறமைக்கு அரசியலுக்கு செல்லலாம் என்றும் ட்வீட்டியிருக்கிறார்.

Tags : #GAMECHANGER #AFRIDI #VIRAL #CONTROVERSY