மஹா சிவராத்திரியில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு போன பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. விருதாச்சலத்தில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 01, 2022 12:01 PM

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயம். தமிழகத்தின் மிக முக்கிய சிவ தலங்களுள் ஒன்றாக அறியப்படும் இந்த ஆலயத்தின் கோபுர கலசங்கள் திருடப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Urns Theft in Viruthachalam viruthagireeswarar temple

"உக்ரைன் மீது தடைசெய்யப்பட்ட குண்டை வீசத் தொடங்கியது ரஷ்யா".. US உக்ரைன் தூதர் போட்டு உடைத்த உண்மை..!

விருத்தகிரீஸ்வரர் கோவில்

சுமார் 1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் ஆலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள கல்வெட்டுகளில் பராந்தக சோழன், கண்டராதித்த  சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர  சோழன் ஆகிய முக்கிய சோழ அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1008 சிவ தலங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோவிலின் சிறப்புகளை தேவாரப் பாடல் 220 அழகாக எடுத்துரைக்கிறது.

களவுபோன கோபுரங்கள்

இன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்த திருக்கோவிலின் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் இருந்த 3 கலசங்கள் திருடப்பட்டு உள்ளன. இந்த கோபுரங்கள் 3 அடி உயரம் கொண்டவை என்றும் இவற்றின் மீது 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருந்ததாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Urns Theft in Viruthachalam viruthagireeswarar temple

குடமுழுக்கு

ஊழிக் காலத்தில் உலகமே அழிவை சந்தித்த நிலையில், இந்தக் கோவில் மட்டும் சிதைவடையாமல் இருந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. அப்படி, பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேக பெருவிழா கடந்த 6 ஆம் தேதி விமர்சியாக நடைபெற்றது.

கடைசியாக 2002 ஆம் ஆண்டு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இப்போது தான் இந்த பெரும் விழா நடைபெற்றது. இதில், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மஹா சிவராத்திரி

இந்து சமய மக்களின் மிக முக்கிய தினங்களுள் ஒன்றான மஹா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மஹா சிவராத்திரியின் போது இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். விருத்தாச்சலத்தில் உள்ள இந்த விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திலும் மஹா சிவராத்திரி விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், மஹா சிவராத்திரி அன்று இந்தக் கோவிலின் கலசங்கள் களவு போயிருப்பது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாம்களுக்கெல்லாம் அப்பன் இந்த vacuum bomb.. உக்ரைன் மீது ரஷ்யா வீசிய குண்டு பற்றி தெரியுமா?.. அதிரவைக்கும் பின்னணி..!

Tags : #VIRUTHACHALAM #VIRUTHAGIREESWARAR TEMPLE #THEFT #DEVOTEES ARE IN SHOCK #மஹா சிவராத்திரி #விருத்தகிரீஸ்வரர் #விருத்தகிரீஸ்வரர் ஆலயம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Urns Theft in Viruthachalam viruthagireeswarar temple | Tamil Nadu News.