இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 18, 2019 10:10 AM
1. தமிழில் சிறந்த நாவலாக 'சூல்' என்ற நாவல் சாகித்யா அகாடமியால் தேர்வு செய்யப்பட்டு, அதை எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய 'Era of Darkness' என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
3. இங்கிலாந்தில் மாடல் அழகி தமரா மாளிகையில் நுழைந்த மர்ம நபர்கள் ரூ.470 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
4. மற்ற செல்ஃபோன் நிறுவனங்களுக்கான செல்ஃபோன் அழைப்புக் கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை நீடிக்கும் என்று டிராய் அறிவித்துள்ளது.
5. தஞ்சையில் நடந்த உடல் தகுதி போட்டியில் வெற்றி பெற்று வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
6. மகாராஷ்டிரா மாநிலத்தில் மஜல்காவ் பகுதியில் உள்ள கேசபுரியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், 17 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
7. ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
8. ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள நிலையில், இதில் ஜி.பெரியசாமி, சாய் கிஷோர் உள்பட தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
9. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ஜனவரி 14-ம் தேதி தொடங்க உள்ளது.
10. சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலையில் தொடர்ந்து 10-வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.81 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
11. நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
12. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் விரும்பினால், கருணை மனுக்கள் அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கலாம் எனக் கூறி, வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 7-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனைக் கேட்டு கதறி அழுத நிர்பயாவின் தாய் ஆஷா, எங்களின் உரிமைக்கு என்ன பதில் என கதறி அழுதார்.
13. டாடா குழுமத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்த்ரி 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
