300 கிலோமீட்டர் வேகம்.. 22 லட்ச ரூபாய் விலை.. TTF வாசன் வாங்கிய புதிய பைக்.. அப்படி என்ன ஸ்பெஷல்! வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pichaimuthu M | Mar 03, 2023 08:35 PM

பிரபல யூடியூபர் வாசன் சூப்பர் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

TTF Vasan buy His Dream Super Bike Suzuki Hayabusa

Also Read | போனில் அழைத்து வர்ணனை செய்வதை பாராட்டிய MS தோனி.. மனம் நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக்!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின.  டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர்.

TTF Vasan buy His Dream Super Bike Suzuki Hayabusa

அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வாசன், தனது முதுகில்  ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. ரசிகர்களின் முகத்தை ஒரே அமர்வில் பச்சை குத்த 27 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆனதாக வாசன் கூறியிருந்தார். இதனை பாராட்டி கலாம் உலக சாதனை நிறுவனம் பாராட்டி உலகசாதனை சான்றிதழ் வழங்கியது.

TTF Vasan buy His Dream Super Bike Suzuki Hayabusa

மேலும் TTF வாசன் Pit Shop ஒன்றையும் துவங்கி உள்ளார். இந்நிலையில் வாசன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நல்ல நேரம் முடிவதற்குள் உடனே புக் பண்ணிடுவோம்" என கூறி பிரபல சுசுகி நிறுவனத்தின் Hayabusa பைக்கை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார். இதற்காக தெரிந்த நண்பரிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக வாசன் குறிப்பிட்டுள்ளார்.

TTF Vasan buy His Dream Super Bike Suzuki Hayabusa

இந்த பைக், 18 லட்ச ரூபாய் முதல் 22 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் மாடிபிகேஷன் 2 லட்சம் செலவு செய்து சாலைகளில் பயணம் செய்யலாம். 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வசதி கொண்டது. வாசனும் டிராக்கில் 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த பைக் 1340 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது. லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் மைலேஜ் தரவல்லது. 190 பிஎஸ் பவர் கொண்டது. 150 நியூட்டன் மீட்டர் டார்க் கொண்டது.

Also Read | மாலத்தீவில் மிருணாளினி ரவி.. மத்த பாட்டுக்கு ஆடி தான பாத்துருக்கீங்க.. அவங்க பாட்டுக்கே ஆடி பாத்ததில்லையே! இதோ பாருங்க 😍

Tags : #TTF #TTF VASAN #BUY #BIKE #SUZUKI HAYABUSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TTF Vasan buy His Dream Super Bike Suzuki Hayabusa | Tamil Nadu News.