"அட, இது காணாம போன நம்ம பைக் ஆச்சே".. ஓனரை ஓவர்டேக் பண்ணி பெட்ரோல் போட்ட திருடர்கள்.. சினிமாவை மிஞ்சிய தரமான சம்பவம்.. 😅
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, இன்றைய காலகட்டத்தில் நிறைய இடங்களில் பைக் அல்லது கார் உள்ளிட்ட வாகனங்கள் திருட்டு போகும் செய்திகளை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

Also Read | வரதட்சணையாக கிடைத்த கார்.. கல்யாணம் பண்ண கையோட மாப்பிள்ளை செஞ்ச விஷயம்.. சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!
இதன் காரணமாக, மிகவும் பாதுகாப்பாக தங்களின் வாகனங்களை பார்ப்பதுடன் மட்டுமில்லாமல், வீட்டை சுற்றி சிசிடிவி கேமராக்கள் சிலர் வைக்கவும் செய்கின்றனர். இதன் மூலம் கூட திருடன் அடையாளங்கள் கிடைத்து அவன் போலீசாரிடம் சிக்குவதும் உண்டு.
இந்த நிலையில், பைக்கை திருடி கொண்டு போன திருடர்கள் மிகவும் வினோதமாக அதன் உரிமையாளர் கையில் சிக்க இருந்தது தொடர்பான சம்பவம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கடலுண்டி கிராமத்தின் பஞ்சாயத்து மெம்பராக இருப்பவர் பிரவீன். இவரது பைக் கடந்த சில தினங்களுக்கு முன் திருடு போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து போலீஸ் நிலையத்திலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் ஒன்றை பிரவீன் அளித்துள்ளார். மேலும், காணாமல் போன பைக்கின் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்து வரவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, அதனைக் கொண்டு வரவும் தனது சில நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு திரும்பி உள்ளார் பிரவீன்.
வீட்டிற்கு திரும்பும் வழியில், பெட்ரோல் போட அங்கிருந்த பங்க் ஒன்றில் பிரவீனின் நண்பர் காரை செலுத்தி உள்ளார். அப்போது பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் இருந்த காரை ஓவர்டேக் செய்த பைக் ஒன்று, அங்கே பெட்ரோல் போட வேகமாக போய் நின்றுள்ளது. அப்போது தான், தாங்கள் இருக்கும் காருக்கு முன் பெட்ரோல் பங்க்கில் நிற்கும் பைக் தன்னுடையது என்று விஷயம் பிரவீனுக்கு தெரிய வந்துள்ளது.
உடனடியாக, காரில் இருந்தவர்கள் வெளியே இறங்கி பிரவீன் பைக்கை திருடி வந்த இரண்டு நபர்களை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அதில் பைக் ஓட்டி வந்த நபர் தப்பியோட, பின்னால் இருந்த நபரை பிரவீன் உள்ளிட்டோர் வசமாக பிடித்தனர். காணாமல் போன பைக் குறித்து புகாரளித்து விட்டு ஆவணங்களை எடுக்க வீட்டிற்கு வந்த வழியில் கண் முன்னால் பைக் வந்த சம்பவம் தொடர்பான செய்தி, அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
Also Read | "இந்தியா தோத்தா ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர கல்யாணம் பண்றேன்".. நடிகையின் பரபரப்பு ட்வீட்!!

மற்ற செய்திகள்
