"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்".. 35 வருட காதல் மனைவிக்காக பைக்கில் கணவர் ஒட்டிய ஸ்டிக்கர்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 10, 2023 02:13 PM

இந்த உலகில் அன்புக்கு ஈடாக எந்தவொரு விஷயமும் இல்லை. எந்தவித பாகுபாடும் இல்லாமல் யார் மீது வேண்டுமானாலும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நாம் அன்பை பொழியலாம்.

Husband Sticker for his wife in bike melts netizens

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் பேருல.. ஆஸ்திரேலிய ஜாம்பவானிடமே சவால் விட்ட தினேஷ் கார்த்திக்.. ஜெயிப்பாரா? மாட்டாரா?

அதே போல, கணவன் மனைவி இடையே உருவாகும் அன்பும் விலை மதிப்பில்லாதது. திருமணத்திற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் துணையாக சேர்ந்தே வாழும் நபர்கள் என்பதால் அந்த பாசம் உயர்ந்து நிற்கும்.

இந்த நிலையில், தனது மனைவியின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக, நண்பர் ஒருவர் தனது பைக்கில் எழுதி வைத்துள்ள வாசகமும் அதன் பின்னால் உள்ள காரணமும் தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது காதல் மனைவி பெயர் லீலா. எட்டாம் வகுப்பு வரை கூட தேர்ச்சி பெறாத பழனிசாமி, கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது லீலாவை சந்தித்த சூழலில் இருவருக்கும் இடையே காதல் உருவானதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Husband Sticker for his wife in bike melts netizens

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் இருவரது வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு வெளியேறி பழனிசாமி மற்றும் லீலா  ஆகியோர் திருமணமும் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. லீலாவின் பெற்றோர் அவரை முற்றிலுமாக ஒதுக்கிய சூழலில், அதன் பின்னர் 35 ஆண்டுகளாக மனைவி லீலாவிடம் அன்பு மட்டுமே காட்டி வாழ்ந்து வருகிறார் பழனிசாமி. அதே போல, அவரது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் கூட "மனைவியே  துணை" என ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளார்.

Husband Sticker for his wife in bike melts netizens

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான சூழலில், தற்போது இணையவாசிகள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. 35 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் மனைவியை வாடி போடி என்று கூட கூப்பிட்டது இல்லை என கூறும் பழனிசாமியைக் கண்டு பலரும் மனம் நெகிழ்ந்து போயுள்ளனர். அதே போல, அவரது செயல் பலரின் பாராட்டுக்களையும் பழனிசாமிக்கு பெற்று கொடுத்து சபாஷ் போடவும் வைத்து வருகிறது.

Also Read | "நான் அவுட்டானது பிரச்சனை இல்ல, அசிம் வெளிய வந்திருந்தா எனக்கு செருப்படி தான்".. பிரபல போட்டியாளரின் அப்பா சொன்ன விஷயம்!!

Tags : #HUSBAND #WIFE #BIKE #LOVE #STICKER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Husband Sticker for his wife in bike melts netizens | Tamil Nadu News.