'என்ன சார் சொல்றீங்க'...'இதுல தான் சிக்கலே இருக்கு'... 'அரியர்' மாணவர்களுக்கு பாஸ் போடுவதில் எழுந்துள்ள பிரச்சனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காரணமாக அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த மாணவர்களுக்குத் தேர்ச்சி போடுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாகத் தேர்வு நடத்துவதில் பெரும் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அரியர் தேர்வுக்காகக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இது அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதது.
இந்த சூழ்நிலையில் அரியர் பாடங்களுக்குத் தேர்ச்சி என அரசு அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் வழிகாட்டுதல் ஆகும். ஆனால் அரியர் வைத்திருந்த பல மாணவர்களுக்குத் தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லை எனத் தெரியவந்துள்ளது. அதாவது பல மாணவர்கள் முந்தைய செமஸ்டர்களில் பெற்ற எக்ஸ்டர்னல் (External) மற்றும் இண்டர்னல் (Internal) மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்குத் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் விதிகளுக்கு உட்பட்டுத் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்பதால், அரியர் மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்
