"டீல் பேச அழைத்த மாமியார்!".. "அண்ணன் மனைவி குளிக்கும்போது மறைந்திருந்து வீடியோ!".. சென்னை பெண்ணுக்கு தெரியவந்த மொத்தக் குடும்பத்தின் ‘ஷாக்’ சுயரூபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 2006ம் ஆண்டு திருமணமானது. நிலையில் இத்தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சென்னையில் பைனான்ஸ் மற்றும் கட்டிடம் கட்டித் தரும் ஒப்பந்தத் தொழிலில் இருவரு, ஈடுபட்டு வர, இதனிடையே மகனின் பள்ளி ஆசிரியையுடன் கணவருக்கு தொடர்பிருப்பதாக அறிந்ததை அடுத்து கணவரிடம் இருந்து அப்பெண் விவாகரத்து பெற்றுக்கொண்டு மகனுடன் தனியாக வசிக்கத் தொடங்கினார். எனினும் அப்பெண் தனது கணவருடன் தொழில் ரீதியான தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தி ஆந்திர மாநிலம் நெல்லூர் பாளையம் சந்திரபாடியம் என்ற பகுதியில் நடைபெற்ற கட்டிடப் பணி தொடர்பாக, சீனிவாச ரெட்டி என்பவருடன், அந்த பெண்ணின் கணவருக்கு நட்பு ஏற்பட, சீனிவாச ரெட்டி, இத்தம்பதியின் குடும்ப விவரங்களைத் தெரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறியதுடன், அந்தப் பெண்ணிடம் நட்பாக பழகத் தொடங்கினார். ஆனால் கணவருடனான் தொடர்பில் கணக்கு ஆசிரியை நீடித்து வந்ததால், கணவருடன் சேர அந்தப் பெண் மறுத்து விட்டார். இதனை பயன்படுத்திக்கொண்ட சீனிவாச ரெட்டி தானும், தன் மனைவியை விவகாரத்து செய்ததுடன் தனியாக வாழ்வதால் திருமணம் செய்ய விரும்புவதாக அப்பெண்ணிடம் கூறி சம்மதம் பெற்றார். இவர்கள் 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்பெண்ணின் பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்தின்போது, வரதட்சணையாக 90 சவரன் நகை பெண் தரப்பினர் போட்டுள்ளனர். பின்னர் அப்பெண் மற்றும் சீனிவாச ரெட்டி இருவரும் திருவொற்றியூரில் வசித்தபோது, அரிசி வியாபாரத்திற்கு பணம் வேண்டும் என சிறுக சிறுக அப்பெண்ணிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார் சீனிவாச ரெட்டி. இதனிடையே அப்பெண் கருவுற்றுள்ளார். அதையும் பல காரணங்கள் கூறி சீனிவாச ரெட்டி கலைக்கும்படி செய்ததுடன், கடந்த 2 மாதங்களாக வீட்டில் தங்காமல் வெளியூரிலேயே இருந்து வந்துள்ளார் சீனிவாசன்.
இதனை அடுத்து சந்தேகப்பட்டு விசாரித்த அப்பெண்ணுக்கு சீனிவாச ரெட்டி தன் முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா மற்றும் உடன் பிறந்த சகோதரர் கிஷோர் ஆகியோருடன் சென்னை மாதவரத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதைக் கேட்கப்போன அப்பெண்ணுக்கும் சீனிவாசனுக்கும் தகராறு உண்டாக, கொடுத்த வரதட்சணையை அப்பெண் திரும்பக் கேட்க, சீனிவாச ரெட்டி தலைமறைவாகினார். இதனிடையே சீனிவாச ரெட்டியின் தாய் சந்திரகலா அந்தப் பெண்ணை வீட்டிற்கு சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சீனிவாசனின் முதல் மனைவி பத்மாவதி விலக வேண்டுமானால் 8 லட்சம் ரூபாய் வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அப்பெண்ணோ, கணவர் வேண்டும் என்பதால் 6 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு அந்த வீட்டில் தங்கியுள்ளார். அப்போதுதான் அப்பெண் குளிப்பதை சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மறைந்திருந்து வீடியோவாக எடுத்து, அந்தப் பெண் தன் வீட்டிற்கு சென்ற பிறகு அவரது வாட்ஸ் ஆப்க்கு ஸ்க்ரீன்ஷாட் மட்டும் அனுப்பி, வீடியோவை வெளியிடாமல் இருக்க நகை, பணம் கேட்டு கிஷோர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ந்த அப்பெண் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் அளித்த புகாரின் பேரில் கிஷோரை மாதவரம் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான் சீனிவாச ரெட்டி மீது திருப்பதி, நெல்லுார், உதயகிரி, ஓங்கோல், விஞ்சமூர் காவல்நிலையங்களில், பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், மாதவரம் காவல்நிலையத்திலேயே, சீனிவாச ரெட்டியின் தந்தையை கொலை செய்ய முயன்ற வழக்கில், சீனிவாசன் அவரது மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா, தம்பி கிஷோர் ஆகிய ஒட்டுமொத்த குடும்பமும் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள சீனிவாச ரெட்டி, முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா உள்ளிட்டோர் காவல் துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
